Monday, January 27, 2025
HomeLatest Newsகுடும்பஸ்தர் கண்ட கனவு- தோண்ட தோண்ட மீண்ட விக்கிரகங்கள்!

குடும்பஸ்தர் கண்ட கனவு- தோண்ட தோண்ட மீண்ட விக்கிரகங்கள்!

குடும்பஸ்தர் ஒருவர் வீட்டு வளாகத்தினுள் விக்கிரகங்கள் இருப்பதாக கனவு கண்டதை அடுத்து , அப்பகுதியை அகழ்ந்த போது 12 விக்கிரகங்கள் கிடைக்கப் பெற்றுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மிருசுவில் பகுதியில் வசிக்கும் முத்தையா பாஸ்கரன் என்பவரின் கனவிலே , அவரது வீட்டு வளாகத்தினுள் தெய்வ விக்கிரகங்கள் புதைந்துள்ளதாக காட்சிகள் தோன்றியுள்ளன.

அதை தொடர்ந்து நித்திரை விட்டெழுந்தவர், கனவில் கண்ட பகுதியை அகழ்ந்த போது , சிவன் விக்கிரகம் ஒன்று, சிவலிங்கம் ஒன்று, வராகி அம்மன் விக்கிரகம் ஒன்று, ஆறுதலை முருகன் ஒன்று, சிவனும் பார்வதியும் இடப வாகனத்தில் அமர்ந்திருக்கும் விக்கிரகம் ஒன்று, ஒற்றைத்தலை நாகம் ஐந்து, ஐந்து தலை நாகம் இரண்டு என 12 விக்கிரகங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட விக்கிரகங்களை தனது காணிக்குள்ளையே சிறிய கொட்டகை அமைத்து , அதனுள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடாத்தியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Recent News