உக்ரைனுடனான தானிய ஒப்பந்தத்தின் அமலாக்கத்தை நிறுத்திவைப்பதாக அறிவித்ததைத் தொடா்ந்து, அந்த நாட்டின் ஒடெஸா துறைமுகம் மீது ரஷ்யா புதன்கிழமையும் 2-ஆவது நாளாக தாக்குதல் நடத்தியது.
துறைமுகத்தைக் குறிவைத்து மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், பொதுமக்களை பதுங்குமிடங்களை விட்டு வேளியே வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் பிராந்திய ஆளுநா் ஒலெக் கைப்பா் தெரிவித்தாா்.
உக்ரைனிலிருந்து கருங்கடல் வழியாக தானியங்களை பிற நாடுகளுக்குக் கொண்டு செல்வதற்கான ஒப்பந்தம் ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.
அதில், துறைமுகங்கள் மீது தாக்குதல் நடத்துவதில்லை என்று இரு நாடுகளும் ஒப்புக்கொண்ட போதிலும் அந்த ஒப்பந்த அமலாகத்தை நிறுத்திவைப்பதாக ரஷ்யா திங்கள்கிழமை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.