Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsஉக்ரைன் ரஷ்ய போர் சமாதான பேச்சுவார்த்தைக்கு இந்தியாவிற்கு அழைப்பு..!

உக்ரைன் ரஷ்ய போர் சமாதான பேச்சுவார்த்தைக்கு இந்தியாவிற்கு அழைப்பு..!

இன்று மற்றும் நாளை ஆகிய நாட்களில் ஜெட்டாவில் சவுதி அரேபியா நடத்திய உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி முன்மொழியப்பட்ட சமாதான திட்டம் குறித்து விவாதிப்பதை இந்த கூட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த விவாதங்களுக்கு ரஷ்யா அழைக்கப்படாவிடிலும் விவாதங்களின் பின் பெறப்படும் முடிவுகளை ரஷ்யா பின்பற்றும் என்று கூறியுள்ளது.

அந்த வகையில் இந்த பேச்சுவார்த்தை மூலம் ஜெலென்ஸ்கியின் திட்டம் அனைத்து ரஷ்ய துருப்புக்களையும் திரும்பப் பெறுவதற்கும் உக்ரைனின் சோவியத்திற்கு பிந்தைய எல்லைகளை மீட்டெடுப்பதும் ஆகும்.

அந்த வகையில் இப் பேச்சுவார்த்தையில் இந்தியாவின் பங்கேற்பு உரையாடல் மற்றும் இராஜதந்திரம் என்பன இப் பேச்சுவார்த்தையை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recent News