Friday, November 22, 2024
HomeLatest Newsஉக்ரைனில் புலிகளின் பிரம்மாண்ட ஆயுத தொழிற்சாலை- மோப்பம் பிடித்த அமெரிக்கா...!

உக்ரைனில் புலிகளின் பிரம்மாண்ட ஆயுத தொழிற்சாலை- மோப்பம் பிடித்த அமெரிக்கா…!

சிங்கள பேரினவாதிகளிற்கு அமைதி வழி போராட்டமானது வெற்றி அளிக்கமாட்டாது என்பதை அறிந்த மேதகு பிரபாகரன் ஆயுதவழி போராட்டத்தினை கையிலெடுத்தார். அமைதி வழி போராட்டமே சிறந்தது என எண்ணிய பல தமிழர்கள் பின்னர் அவருடன் ஆயும்மேந்த இணைந்து கொண்டனர்.

விடுதலை போராட்டத்திற்கு முதலாவது ஆயுதத்தினை ஆரம்பத்தில் தளபதியாகவிருந்த செல்லக்கிளி அம்மான் என்பவரின் ஆயுதத்தினை விற்பனை செய்தே வாங்கினார்கள்.

தொடர்ந்து சிங்கள காவல்நிலையங்கள் மற்றும் இராணுவ முகம் போன்றவற்ரை தாக்கி அவற்றை கைப்பற்றி அங்குள்ள ஆயுதங்களை தம்வசமாக்கினர்.

அத்துடன் இந்திராகாந்தி மற்றும் எம்.ஜி.ஆர் போன்றோரும் ஆயுதங்களை பெறுவதற்கு உதவிகளை வழங்கினார்கள்.

எவ்வாறிருப்பினும் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட புலிகளிடமிருந்த ஆயுதம் குறைவடைய தொடங்கியதால் உக்ரேனில் உள்ள ஒரு ஆயுத தொழிற்சாலையினை விடுதலை புலிகள் லீசிற்கு எடுத்து நடத்தியுள்ளனர்.

அந்த காலகட்டத்தில் அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனிற்கும் இடையில் கடுமையான மோதல் நிலவிய பொழுது அமெரிக்காவிற்கு எதிராக செயற்படுகின்ற வியட்னாம், சிரிய, ஈரான் போன்ற நாட்டு போராளிகளிற்கு சோவியத் யூனியன் ஆயுதங்களை வழங்கி உதவியுள்ளது.

அவ்வாறு ஆயுதங்களை வாங்குவதற்காக உக்ரேனில் ஆயுத தொழிற்ச்சாலையினையும் அமைத்துள்ளது. இதனை அறிந்து கொண்ட அமெரிக்க உளவு நிறுவனம் போராளிகளிற்கு ஆயுதம் போக கூடாது என்பதற்காக ரஷ்யாவுடன் ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டது.

இந்த ஒப்பந்தத்தினால் ரஷ்யா குறித்த ஆயுத தொழிற்சாலையினை கைவிட சில இராணுவத்தினர் அதனை தமக்கு சொந்தமாக்கியத்துடன் களவாக சந்தைகளில் விற்றுள்ளனர்.

இவ்வாறிருக்கையில் உக்ரைனில் உள்ள நபர் ஒருவரின் பெயரில் விடுதலைப்புலிகளிற்காக அந்த ஆயுத தொழிற்சாலையானது வருடாந்த லீசிற்கு எடுக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்தே விடுதலைப்புலிகளிற்கு தேவையான கையெறி குண்டுகள், ஸ்ரங்கிராணைட் மற்றும் துப்பாக்கி ரவைகள் என அனைத்தையும் கொண்டுவரப்பட்டுள்ளது.

இவற்றினை 1999 ஆம் ஆண்டளவில் மோப்பம் பிடித்த அமெரிக்கா அவற்றினை மூடியுள்ளது.

விமான எதிர்ப்பு ஏவுகணைகளை உக்ரேனில் இருந்து தயாரித்து இலங்கைக்கு கொண்டுவர வேண்டுமென தீர்மானித்திருந்த புலிகளின் திட்டமும் சுக்கு நூறாகியது.

ஒரு பக்கம் சிங்களவர்களிற்கு வெளிநாட்டவர்கள் ஆயுதங்களை வழங்கி குவிக்க மறுபக்கம் விடுதலை புலிகள் சிறுக சிறுக ஆயுதங்களை சேமித்த பொழுதும் அவை குறைந்து சென்றது.

Recent News