Wednesday, December 25, 2024
HomeLatest Newsஅமெரிக்காவில் காவல்துறையில் இணையவுள்ள ரோபோ..!

அமெரிக்காவில் காவல்துறையில் இணையவுள்ள ரோபோ..!

அமெரிக்காவின் நியூயார்க் பொலிஸார் காவல்துறை பணியில் டிஜிடாக் என்ற ரோபோவை பயன்படுத்துவதற்கான சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

நகரின் முக்கிய பகுதியில் டிஜிடாக் இயக்கத்தை பரிசோத்த பொலிஸார், நெருக்கடி காலங்களில் மனிதர்களுக்கு உதவுதல், சுரங்கப்பாதைகள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் ரோந்து சென்று கண்காணித்தல், மக்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில் இந்த டிஜிடாக் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டிலேயே இந்த ரோபோ பரிசோதிக்கப்பட்ட போதிலும் அந்த காலப்பகுதியில் எழுந்த எதிர்ப்பால் டிஜிடாக் ரோபோ காவல்துறையில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Recent News