Friday, May 16, 2025
HomeLatest Newsஎதிர்வரும் நாட்களில் டீசல், பெற்றோல் தட்டுப்பாடு அதிகரிக்கும்?

எதிர்வரும் நாட்களில் டீசல், பெற்றோல் தட்டுப்பாடு அதிகரிக்கும்?

எதிர்வரும் நாட்களில் டீசல் மற்றும் பெற்றோல் தட்டுப்பாடு அதிகரிக்கும் என பெற்றோலிய கூட்டுத்தாபன உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே, நாட்டில் எரிபொருள் வரிசைகள் மேலும் நீடிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் சுமார் 350 மெற்றிக் தொன் பெற்றோல் மற்றும் 800 மெற்றிக் தொன் டீசல் உற்பத்தி செய்யப்படுகிறது.

எனினும், அந்த அளவுகள் அன்றாட தேவைகளுக்கு போதுமானதாக இல்லை எனவும் பெற்றோலிய கூட்டுத்தாபன உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இன்றைய தினமும் எரிபொருளினை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதனை அவதானிக்க முடிகின்றது.

Recent News