யு.எஸ்.எப். ஸ்ரீலங்கா சமூக சேவைகள் அமைப்பின் 05 வது வருட நிறைவையொட்டி நடாத்தப்பட்ட வருடாந்த இப்தார் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு, சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் அமைப்பின் தலைவரும் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமாகிய ஏ.ஜி.அன்வர் தலைமையில் (10) நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு அமைப்பின் போசகர்கள், அமைப்பின் ஆலோசகர்கள், அமைப்பின் உயர் பீட முகாமைத்து சபை உறுப்பினர்கள், அமைப்பின் அங்கத்தவர்கள், வை.எம்.எம்.ஏ. பேரவையின் தேசிய உப தலைவர் எஸ்.தஸ்தகீர், சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜூம்மா பள்ளிவாசல் தலைவர், சாய்ந்தமருது பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர், அல் அமானா நற்பணி மன்றத்தின் தலைவர், அல்- மீஸான் பௌண்டசன் நிர்வாகிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சாய்ந்தமருது பிரதேசத்தின் பாடசாலை அதிபர்கள், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிற அமைப்புகளின் பிரதிநிதிகள், ஊடகவியளாலர்கள், அமைப்பின் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் அமைப்பின் தலைவர் அன்வர் உரையாற்றுகையில்,
எதிர்காலத்தில் அமைப்பினால் கல்விக்கு கரம் கொடுப்போம், சமூக செயற்பாட்டாளர்களை வாழும் போதே வாழ்த்துவோம், நிலையான தர்மத்திற்கான அழைப்பு, ஏழைகளின் துயர் துடைப்போம், சூழலுடன் நாம் பல எண்ணக்கருக்களில் பல் சமூக செயற்பாடுகளை செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றார்.