இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் விளைவுகளைத் தணிக்க ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் தனது ஆதரவை வழங்கியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைக்காக வொஷிங்டனில் இருக்கும் நிதியமைச்சர் அலி சப்ரி மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்ட நிர்வாகி அச்சிம் ஸ்டெய்னர் ஆகியோருக்கு இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போதே ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்ட நிர்வாகி அச்சிம் ஸ்டெய்னர் சாதகமான பதிலினை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய கடன் நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையில் இலங்கை அரசாங்கத்திற்கு உதவ ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் (UNDP) அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதாரத்தில் எதிர்மறையான போக்கு குறைக்கப்படுவதையும், குறிப்பாக ஆபத்திலுள்ள மக்களின் நலன் கருத்தில் கொள்ளப்படுவதையும் இது உறுதி செய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.