Saturday, January 18, 2025
HomeLatest Newsநாடாளுமன்ற அலுவல் குழுவிற்கு இரண்டு புதிய உறுப்பினர்கள்

நாடாளுமன்ற அலுவல் குழுவிற்கு இரண்டு புதிய உறுப்பினர்கள்

நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவின் உறுப்பினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவில் கடமையாற்றுவதற்காக குறித்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளை மற்றும் 2022 ஜனவரி 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையின் பிரகாரம் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டதாக சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

Recent News