Monday, April 29, 2024
HomeLatest Newsஇன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!

இன்றைய தினம் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ ற்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகும் என கூறப்பட்டுள்ளது.

அத்துடன் கிழக்கு மாகாணத்தில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடிய சத்தியம் காணப்படுவதாகவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதுடன் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக்கொள்ள முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறும் வழிமாநாடாளாவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Recent News