வட, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் இணைந்து உண்மையையும் நீதியையும் கோரி முன்னெடுத்துவரும் தொடர் போராட்டம் 2000 நாட்களை எட்டியுள்ளமையை நினைவுகூரும் வகையில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் இன்றையதினம் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று சற்றுமுன் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.
குறித்த போராடடமானது கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக தமிழ் இனப்படுகொலையில் ஈடுபட்ட கோட்டாபய மற்றும் மகிந்த உட்பட அனைத்து குற்றவாளிகளையும் தண்டிக்குமாறு சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுக்கிறோம் .என்ற தொனிப்பொருளில் இடம்பெற்றுவருகிறது.
போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் கறுப்பு நிற ஆடைகள் அணிந்து கையில் கறுப்பு நிற கொடிகளையும் தீப்பந்தங்களையும் ஏந்தியவாறும் முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மற்றும் சிவல் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சமயத் தலைவர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.