அமெரிக்காவைச் சேர்ந்த இசைக்கலைஞர் கலீத் முகமது காலித் . சுயமாக ஆல்பம் பாடல்கள் தயாரிப்பதோடு மட்டுமின்றி 10 க்கும் மேற்பட்ட பல முன்னணி இசைத் துறை நிறுவனங்களுக்கு இசைப்பதிவும் செய்து கொடுத்து வருகிறார் .
சமீபத்தில் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகானத்திலுள்ள மியாமி பகுதியில் இசைக்கச்சேரி ஒன்றை நடத்தியுள்ளார் . காரிலிருந்து கச்சேரி நடைபெறும் மேடைக்கு நடந்துசென்றால் காலணிகள் அழுக்காகிவிடும் என்பதற்காக ,கச்சேரி நடத்த வேண்டிய மேடை வரை பாதுகாவலர்களை அழைத்து மேடை வரை தூக்கிச்செல்ல வலியுறுத்தியுள்ளார் . தூக்கிச்செல்ல வைத்த இசைக்கலைஞருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன .இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பரவியது . காலணி அழுக்காகிவிடக்கூடாது என்பதற்காக ஆள் வைத்து தூக்கிச்செல்லவைப்பது அபத்தமானது என பலர் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.