“எமது பணத்தை கொள்ளையிட்ட திருட்டு கூட்டத்தை விரட்டுவோம்” என்ற தொனிப் பொருளில் தேசிய மக்கள் சக்தி நடத்தி வரும் மூன்று நாள் பாத யாத்திரை இன்று இரண்டாவது நாளாக பாணந்துறை வாத்துவை பகுதியில் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகியது.
அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படும் இந்த பாத யாத்திரையில் பெருந்தொகையான மக்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.
இந்த பாத யாத்திரை இன்று மொறட்டுவை நகரில் முடிவடைய உள்ளதுடன் நாளை மொறட்டுவை நகரில் இருந்து கொழும்பு நோக்கி புறப்படவுள்ளது.
இதன் பின்னர் கொழும்பு நகர சபை மைதானத்தில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டமும் பொதுக் கூட்டமும் நடத்தப்படவுள்ளது.
பாத யாத்திரையில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள், கலைஞர்கள், மருத்துவர்கள், சட்டத்தரணிகள், பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் உட்பட பல துறைகளை சேர்ந்த தொழில் சார் நிபுணர்களும் கலந்துக்கொண்டுள்ளனர்.