Friday, May 3, 2024
HomeLatest NewsIndia Newsமீண்டும் தள்ளி போகும் பள்ளிகள் திறப்பு..!வெளியான மகிழ்ச்சி தகவல்..!

மீண்டும் தள்ளி போகும் பள்ளிகள் திறப்பு..!வெளியான மகிழ்ச்சி தகவல்..!

பல மாவட்டங்களில் தொடர்ந்தும் 100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்து வருவதால் பள்ளிகளை மீள ஆரம்பிக்கும் செயற்பாடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை கோடை காலமாகும். கடந்த 28 ஆம் திகதி அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் வெயிலின் உக்கிரம் அதிகரித்துள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1 – 5 ஆம் வகுப்பு மாணவர்களிற்கு ஜூன் 14 ஆம் திகதியும் , 6 – 12 ஆம் வகுப்பு மாணவர்களிற்கு ஜூன் 12 ஆம் திகதியும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கோடை விடுமுறையின் பின்னர் ஜூன் மாதத்தில் மீண்டும் பள்ளிகள் ஆரம்பிக்கப்படுவது வழமை. அதன் பிரகாரம், தமிழகத்தில் 1-5 ஆம் வகுப்பு வரையில் ஜூன் 5 ஆம் திகதியும்,6-2 வரை ஜூன் 1 உம் திறப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

வெயில் காரணமாக பள்ளிகளை ஆரம்பிப்பதை 7 ஆம் திகதிக்கு ஒத்தி வைப்பதாக பள்ளிக்கல்வி அமைச்சர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News