Tuesday, December 24, 2024
HomeLatest Newsஎந்த நேரத்திலும் பிரதமர் பதவி விலகலாம்! அலரி மாளிகை தகவல்களால் குழப்பம்

எந்த நேரத்திலும் பிரதமர் பதவி விலகலாம்! அலரி மாளிகை தகவல்களால் குழப்பம்

பிரதமர் இன்று பதவி விலகுவார் என பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அலரி மாளிகைத் தகவல்கள் குழப்ப நிலையை ஏற்படுத்தியுள்ளது.

பதவி விலகல் தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எட்டப்படவில்லை என அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் அலரி மாளிகையிலுள்ள முக்கிய ஆவணங்கள் உள்ளிட்ட பொருட்களை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எந்த நேரத்திலும் பிரதமர் பதவி விலகலாம் என்ற அடிப்படையில் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுப்பதாக அலரி மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இன்றையதினம் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பதவி விலகினால் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக 200 பேருந்துகளில் இன்று காலை மக்களை கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இவர்களுக்கு தேவையான உணவு மற்றும் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

Recent News