Friday, January 10, 2025
HomeLatest Newsசர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்குமாறு மகாநாயக்க தேரர்கள் மீண்டும் வலியுறுத்தல்

சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்குமாறு மகாநாயக்க தேரர்கள் மீண்டும் வலியுறுத்தல்

சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்குமாறு வலியுறுத்தி மகாநாயக்க தேரர்கள் மீண்டும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டில் அரசியல், சமூக மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த 24 ஆம் திகதி தம்மால் அனுப்பட்ட யோசனைகளுக்கு அமைவாக உரிய நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்குமாறும் இதன்போது கோரிக்கை விடுக்கபட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் ஏற்பட்டுள்ள மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு மக்கள் பிரதிநிதியும் நடவடிக்கை எடுக்காமையானது கவலையளிக்கும் விடயமாகுமெனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலையில் அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றினைந்து பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மகாநாயக்க தேரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Recent News