கடந்த ஒருவாரமாக தமிழகம் திருச்சி தடுப்பு முகாமில் 10 இலங்கையர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.விசா காலம் முடிவடைந்தும் அந்த நாட்டில் தங்கியிருந்தமை,முறையற்ற வகையில் நாட்டுக்குள் நுழைந்தமை போன்ற காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு திருச்சி முகாமில் இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.10 பேர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள நிலையில்,6 பேரின் உடல் நிலை தற்போது மோசமடைந்த நிலையில்,திருச்சி அரச மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
எனினும் தற்போதுவரை தமிழக முதல்வரோ ,அரச அதிகாரிகளோ.அரசியல் வாதிகளோ இதற்கான நடவடிக்கைகள் எடுக்கவில்லையென்றும்,மருத்துவமனையில் போதியளவு வசதி இல்லாமல் ஒரு கட்டிலில் இரண்டு பேர் உறங்கும் நிலைமை காணப்படுவதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.