Wednesday, June 26, 2024
HomeLatest NewsWorld Newsதலைகுனிந்து மன்னிப்பு கேட்ட டொயோட்டா தலைவர்!

தலைகுனிந்து மன்னிப்பு கேட்ட டொயோட்டா தலைவர்!

டொயோட்டா (Toyoda) நிறுவனத்தின் தலைவர் அகியோ டொயோடா (Akio Toyoda) பாதுகாப்பு பரிசோதனை விவகாரத்திற்காக தலைகுனிந்து மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு மன்னிப்பு கேட்டுள்ளார்.
அதாவது , ஜப்பானை தலைமையகமாகக் கொண்ட டொயோட்டா நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 7 வகை மாடல் கார்களுக்கு முறையான வகையில் பாதுகாப்பு பரிசோதனை (சேஃப்டி டெஸ்ட் ) செய்யப்படாமல் ஏமாற்று வேலை நடந்துள்ளதாக முறைப்பாடு எழுந்துள்ளது.

கொலிசன் டெஸ்ட், ஏர்பேக் டெஸ்ட், சீட் டேமேஜ் டெஸ்ட், இன்ஜின் பவர் டெஸ்ட் ஆகிய பரிசோதனைகள் உரிய முறையில் பரிசோதிக்கப்படால் அவற்றுக்கு தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து கொரோலா பீல்டர், கொரோலா ஆக்சியோ, யாரிஸ் கிராஸ் ஆகிய 3 மாடல் கார்களின் உற்பத்தியை டொயோட்டா நிறுத்திக்கொண்டது.

மேலும் , இந்த விவகாரம் ஆட்டோமொபைல் துறையில் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் டொயோட்டா நிறுவனத்தின் தலைவர் அகியோ டொயோடா தான் மிகவும் வருந்துவதாகவும் “I AM TRULY SORRY” என்றும் சில வினாடிகள் தலைகுனிந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.

Recent News