Monday, May 6, 2024
HomeLatest Newsஉலகின் கொடூரமான தலைவர்கள்!

உலகின் கொடூரமான தலைவர்கள்!

உலகில் மக்கள் பொறுப்பில் இருக்கும் தலைவர்களின் மிகவும் மோசமான கொடூரமான தலைவர்கள் பற்றிய தகவலை இந்த பட்டியலில் பார்க்கலாம்.

ஒவ்வொரு காலத்திலும் மிகவும் ஆபத்தான கொடூரமான தலைவர்கள் பலர் இருந்துள்ளார்கள் . அவர்கள் ஆட்சி அதிகாரத்தை மிகவும் மோசமாக பயன்படுத்தி பலரை துன்புறுத்தியுள்ளார்கள். ஒருவரின் ஹீரோ இன்னொருவருக்கு வில்லன் என்று பிரபல கருத்து ஒன்று உள்ளது. இவர்களின் வாழ்க்கையை வரலாற்று ஆசிரியர்கள் எவ்வளவு திரித்து எழுதினாலும் அவர்களின் கொடூரம் அப்படியே உள்ளது. அவர்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Mao zedong

சீனாவில் இப்போது இருக்கும் கம்யூனிச அரசை அமைத்தவர். இவரது ஆட்சியில் யாராவது எதிரிகள் என்று இருந்தால் அவர்கள் கொடூரமாக கொலை செய்யப்படுவார்கள். இவரது ஆட்சியில் 40 லட்சம் மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

Augusto Pinochet

சிலி நாட்டின் அதிபராக இருந்த உவர் அமெரிக்க அரசின் பக்கபலத்துடன் பல ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்தார். இவரது ஆட்சியில் 35 ஆயிரம் பேர் கொடூரமாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

Idi Amin

உகாண்டா அதிபராக இருந்த இவர் மனிதமாமிசத்தை விரும்பி உண்பவர் என்று கூறப்படுகிறது. இவரின் கொடூரமான 8 ஆண்டுகால ஆட்சியில் 3 லட்சம் பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு வசித்த இந்திய மற்றும் பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்தவர்களை வெளியேற்றியதும் இவர் தான்.

​Queen Mary 1 (Blood Mary)

இவர் இங்கிலாந்து நாட்டின் அரசியாக 1553 ஆம் ஆண்டு பதவியேற்றார். கத்தோலிக்க மரபை பின்பற்றும் இவர் அதற்கு எதிராக இருந்த ப்ரோட்டஸ்டண்ட் மரபை சேர்ந்தவர்களை உயிரோடு எரித்து கொன்றார். இவருக்கு இதன் காரணமாகவே ‘Bloody Mary’ என்று பெயர் வந்தது.

​Vladimir Lenin

ரஷ்யாவின் ‘சிவப்பு சூரியன்’ எனும் பெயர் கொண்ட இவர் கம்யூனிசத்தை நிறுவியவர். இவருக்கு எதிராக களம் இறங்குபவர்களை கொடூரமாக கொலை செய்தார்.

Adolf Hitler

ஜெர்மனியின் அதிபராக 1933 முதல் 1945 ஆம் ஆண்டு வரை இருந்தவர், உலகப்போரை துவக்கியவர். இவரது ஆட்சியில் ஜெர்மனி பல்வேறு வளர்ச்சிகளை பெற்றாலும் அவை அனைத்தும் உலகப்போர் தோல்வியில் முடிந்தது. இவரது ஆட்சியில் லட்சக்கணக்கான யூதர்களை, எதிரிகளை சித்ரவதை செய்து கொன்றுள்ளார்.

Genghis Khan

இளம் வயதில் அடிமையாக இருந்து மெதுவாக வளர்ந்து மங்கோலியாவின் பேரரசராக மாறிய செங்கிஸ் கான் தனது வாழ்க்கையில் பல கொடூரங்களை செய்துள்ளார்.

மங்கோலியாவின் நாடோடி குழுக்கள் அனைத்தையும் இணைத்து மத்திய ஆசியா, சீனா போன்ற நாடுகளை எல்லாம் கைப்பற்றினார். இவர் ஆட்சியில் மக்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டதாக தெரிகிறது.

Attila the hun

தனது சகோதரனை கொன்ற பிறகு கிபி 434 முதல் 452 ஆம் ஆண்டு வரை ஹன் அரசை தலைமையேற்று நடத்திவந்தார். இது தற்போதுள்ள ஹங்கேரி நாட்டில் அமைந்துள்ளது.

இவரின் ஆட்சியில் எல்லையை தற்போதுள்ள ஜெர்மனி முதல் ரஷ்யா, உக்ரைன், பால்கன் நாடுகள் போன்றவற்றிற்கு விரிவு படுத்தினார். இவர் மிகவும் கொடூரமாக ஆட்சி செய்ததாக கூறப்படுகிறது. இவர் கால்வைத்த இடங்களில் மீண்டும் புல் கூட முளைக்காது என்று கூறுவார்கள்.

Recent News