Sunday, January 12, 2025
HomeLatest Newsஅவசரகால நிலை அமுல்; நாட்டை விட்டு சென்ற முக்கியஸ்தர்.

அவசரகால நிலை அமுல்; நாட்டை விட்டு சென்ற முக்கியஸ்தர்.

நாட்டில் கடந்த சில மாதங்களாக ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு பகுதிகளிலும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியுள்ளார்.

இவ்வாறான நிலையில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா சிங்கப்பூர் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று அதிகாலை(7) உள்ளூர் நேரப்படி 12.50 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SQ-469  இல் சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Recent News