Wednesday, October 2, 2024
HomeLatest NewsWorld Newsசெவ்வாய் கிரக ஆராய்ச்சியில் இலங்கை பெண்: குவியும் பாராட்டுக்கள்!!!

செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் இலங்கை பெண்: குவியும் பாராட்டுக்கள்!!!

நாசா நடத்திய செவ்வாய் கிரகத்தில் வாழ்வது தொடர்பான ஆராய்ச்சிக்காக தேர்வு செய்யப்பட்ட நான்கு பேர் கொண்ட குழு தனது செயல்பாடுகளை தொடங்கியுள்ளதாக நாசாவின் ஜான்சன் விண்வெளி மையம் (NASA’s Johnson Space Center) அறிவித்துள்ளது.இந்த நால்வரில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பியூமி விஜேசேகரவும் இடம்பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.
இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பியுமி விஜேசேகர கலிபோர்னியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள NASA Ames ஆராய்ச்சி மையத்தில் உள்ள கதிர்வீச்சு உயிரியல் ஆய்வகத்தில் முதுகலை ஆராய்ச்சி விஞ்ஞானி ஆவார்.

பியுமி விஜேசேகர கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உயிரி பொறியியலில் தனது இளங்கலைப் பட்டத்தையும், பென்னின் பிட்ஸ்பர்க், கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் பயோமெடிக்கல் பொறியியலில் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களையும் பெற்றுள்ளதுடன், பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்த குழு முதலில் நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தில் உருவாக்கப்பட்ட செவ்வாய் கிரக சூழலான மனித ஆய்வு ஆராய்ச்சி Human Exploration Research Analog (HERA) இல் 45 நாட்கள் ஆராய்ச்சியை மேற்கொள்ளவுள்ளது.அதன்படி, மே 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ஆராய்ச்சி ஜூன் 24 ஆம் திகதி முடிவடைய உள்ளது.

விண்வெளி வீரர்கள் சந்திரன், செவ்வாய் மற்றும் அதற்கு அப்பால் ஆழமான விண்வெளி பயணங்களுக்கு அனுப்பப்படுவதற்கு முன், அவர்கள் தனிமைப்படுத்தல், ஒரு சிறிய இடத்தில் நீண்ட நேரம் மற்றும் தொலைதூர நிலைமைகளுக்கு எவ்வாறு மாற்றியமைப்பது போன்றவற்ற சிறப்புப் பயிற்சியையும் பெற்றுள்ளனர்.

Recent News