இலங்கை தனது பிரத்தியேக பொருளாதார வலயத்தில் ஆய்வுகளை மேற்கொள்ளும் அனைத்து ஆராய்ச்சிக் கப்பல்களுக்கும் ஓராண்டு தடைவிதித்த பின்னர், சீனாவுடன் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த தடை, ஜனவரி 3, 2024 முதல் அமுலுக்கு வந்தது .இலங்கையின் இலங்கையின் பொருளாதார வலயத்தில் சீனக் கப்பல்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி என்று சிலர் விளக்கம் அளித்துள்ளனர்,
2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி இந்த முடிவை இலங்கை இந்தியாவுக்குத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.இந்தியாவின் மூலோபாய மற்றும் பாதுகாப்பு நலன்களைக் கருத்தில் கொள்ளுமாறு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வலியுறுத்தி 2023 ஜூலை மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்துஇந்த முடிவு எட்டப்பட்டுள்ளது .
குறிப்பாக, இந்த கோரிக்கை டிசம்பர் 2023 இல் சீன ஆராய்ச்சி கப்பலான “சியாங் யாங் ஹாங் 3” க்கு இலங்கை அனுமதி கொடுத்ததில் இருந்து இந்திய தரப்பினரால் பெரிதும் அழுத்தம் கொடுக்கப்பட்டது .