நாடு முழுவதிலும் உள்ள லங்கா சதொச கிளைகளில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
சில வாடிக்கையாளர்கள் அரிசி பருப்பு கொள்வனவு செய்வதற்கு லங்கா சதொச கிளைகளுக்குச் சென்று பொருட்கள் இல்லாததால் வெறுங்கையுடன் வீடு திரும்ப நேரிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
நாடு முழுவதிலும் உள்ள லங்கா சதொச கிளைகளில் பெரும்பாலானவை வெறுமையாக காணப்பட்டுள்ளன.
இதேவேளை, சில சுப்பர் மார்க்கெட்களில் ஒரு கிலோ சிவப்பு அரிசி 145 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.
எனினும் ஒரு வாடிக்கையாளர் அதிகபட்சமாக மூன்று கிலோ வரை மாத்திரமே கொள்வனவு செய்ய முடியும் என குறிப்பிடப்படுகின்றது.