Monday, April 29, 2024
HomeLatest Newsமணல் மாபியா – களத்தில் இறங்கவுள்ள பொலிசார் – கிழக்குமாணத்திலே அதிகம்- வெளியான தகவல்.!

மணல் மாபியா – களத்தில் இறங்கவுள்ள பொலிசார் – கிழக்குமாணத்திலே அதிகம்- வெளியான தகவல்.!

வெவ்வேறு பெயர்களில் ஈடுபடுகின்ற மணல் மாபியாவை இல்லாமல் ஒழித்து மக்களுக்கு குறைந்த விலையில் மண் மற்றும் மணல் போன்றவற்றை தடையில்லாமல் வழங்குவதே பிரதான நோக்கம் என
புவிச்சரிதவியல் அளவை, சுரங்கங்கள் பணியகத்தின் தலைவர் ஆர்.சன்ஜீபன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் மணல் அகழ்வு தொடர்பான ஊடக சந்திப்பு இன்று கொழும்பு பிட்டகோட்டையிலுள்ள புவிச்சரிதவியல் அளவை, சுரங்கங்கள் பணியகத்தில் இடம்பெற்றிருந்தது.

சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட்டின் வழிகாட்டுதலில் இந்த மணல் மாபியா தடுத்து நிறுத்தப்படும் என்றும் ஒரு லோட் ரிப்பர் மணல் 28 ஆயிரம் ரூபா தொடக்கம் விற்கப்படுவதாகவும் ஆனால் அரசாங்கத்திற்கு 600 ரூபா மட்டுமே கிடைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றாடலுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக தடுத்து நிறுத்தப்படும் என்றும் ஆர்.சன்ஜீபன் மேலும் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோதமாக மணல் அகழ்வது அதிகரித்துள்ளதாகவும் எனவே இதனை தடுப்பதற்கு பொலிசார் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஆர்.சன்ஜீபன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொலிசார் மூலம் விளிப்புணர்வு கருத்தரங்குகளையும் ஒழுங்குபடுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recent News