கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக சமீப நாட்களாக பேக்கரி உற்பத்தி பொருட்களின் விற்பனை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் இத்தொழிலை நடத்தும் தொழிலதிபர்கள் தெரிவிக்கின்றனர்.
ரொட்டி உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை உயர்வு, பேக்கரி பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை உயர்வு போன்ற காரணங்களால் கடந்த சில மாதங்களாக விற்பனை சரிந்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில், எரிவாயு நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்து வருவதால், அனைத்து உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகவும் இதனால் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஊழியர்களின் சம்பளம், கடை வாடகை, மின்சாரம் மற்றும் நீர் கட்டணம் செலுத்தும் போது தமக்கு வியாபாரத்தில் வருமானம் கிடைக்காததால் வியாபாரத்தை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் மேலும் தெரிவித்தனர்.