Thursday, January 9, 2025
HomeLatest Newsபிரதமர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி கோரிக்கை – நிராகரித்தார் சஜித்!

பிரதமர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி கோரிக்கை – நிராகரித்தார் சஜித்!

பிரதமர் பதவியை ஏற்று இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிராகரித்துள்ளார்.

இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்போதைய நெருக்கடி மத்தியில் பிரதமர் பதவியை ஏற்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற விஷேட அமைச்சரவைக் கூட்டத்தை தொடர்ந்து, தொலைபேசி அழைப்பு மூலம் ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்திருந்தார்.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டத்தை நடாத்தினார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது உட்பட சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்த பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் என இதன்போது முடிவு செய்யப்பட்டது.

அதன்பிரகாரம் சட்டத்தரணிகள் சங்கத்தின் பரிந்துரைகளின் படி நெருக்கடிக்கு தீர்வு காண இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவளிக்க தயார் என ஐக்கிய மக்கள் சக்தி நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recent News