Saturday, November 16, 2024
HomeLatest Newsஅரிசி கையிருப்பு வேகமாக குறைகிறது! நாமல் கருணாரத்ன

அரிசி கையிருப்பு வேகமாக குறைகிறது! நாமல் கருணாரத்ன

அடுத்த இரண்டு மாதங்களில் நாட்டின் அரிசி கையிருப்பு முழுமையாக குறையும் என அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

சிங்கள நாளித் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, அரிசி இருப்பு ஏற்கனவே வேகமாக குறைந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

குறிப்பாக நாட்டிற்கு வருடாந்தம் 3.7 மில்லியன் மெட்ரிக் தொன் நெல் தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் பெரும் போகத்தில் 1.5 மில்லியன் மெட்ரிக் தொன் நெல் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. உர நெருக்கடியின் போது சிறுபோகத்தில் நெல் உற்பத்தி செய்வது கனவாகவே உள்ளது எனவும் கருணாரத்ன தெரிவித்தார்.

அதன்படி, ஆண்டு முழுவதும் 3.7 மில்லியன் மெட்ரிக் தொன் நெல் அறுவடைக்கு பதிலாக குறைந்தது 2 மில்லியன் மெட்ரிக் தொன் நெல் முடிக்கப்படவில்லை என்பது பாரிய பிரச்சினையாகும்.

அரிசியை இறக்குமதி செய்தால் தற்போதைய டொலரை விட நான்கு மடங்கு அதிக விலை கிடைக்கும் எனவும் நாட்டில் டொலர் பற்றாக்குறை உணவு நுகர்வை முற்றாக பாதிக்கும் போது நாட்டின் மோசமான நெருக்கடி ஆரம்பிக்கும் எனவும் அவர் கூறுகிறார்.

உரம் வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்த போதிலும், யாலுக்கான தேவையான உரத்தை இதுவரை அரசாங்கம் வழங்காததால் உணவுப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என நாமல் கருணாரத்ன மேலும் தெரிவிக்கின்றார்.

“ஜூன் மாதத்திற்கு பிறகு குழந்தைகள் உணவின்றி ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு ஆளாகின்றனர்” என்று விவசாயத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போது குளங்கள், அணைக்கட்டுகள், நெற்செய்கைகள் போன்றவற்றில் நீர் நிரம்பியுள்ள போதிலும் 45 வீதமான நெற்செய்கையே யாழ் பருவத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Recent News