பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைத் தவிர, அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஏனைய முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் சபையில் ஆளும் கட்சியின் பின்வரிசை ஆசனங்களில் காணப்பட்டனர்.
புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்ட பின்னர் இன்று முதன்முறையாக நாடாளுமன்றம் கூடியது.
சமல் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் ஷசீந்திர ராஜபக்ஷ ஆகிய மூவரும் முன்னாள் அமைச்சர்கள். இதுவரை முன்வரிசை ஆசனங்களில் அமர்ந்திருந்தவர்கள் இன்று பின்வரிசையில் காணப்பட்டனர்.
ஆளும் கட்சியின் கடைசி வரிசையில் முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ அமர்ந்திருந்தார்.
மேலும், முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, ரோஹித அபேகுணவர்தன, எஸ்.எம்.சந்திரசேன, பந்துல குணவர்தன, சரத் வீரசேகர ஆகியோரும் அரசாங்கத்தின் பின்வரிசையில் காணப்பட்டனர்.