Thursday, May 2, 2024

சீனாவின் போஹாய் விரிகுடா பகுதியில் கப்பல்கள் செல்லத் தடை..!வெளியான அறிவிப்பு..!

சீனாவின் போஹாய் விரிகுடா பகுதியில் கப்பல்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனா அண்மைய காலங்களாக தைவான் கடற்பகுதியில் போர்ப் பயிற்சிகளை மேற்கொண்டு அங்கு பதற்றத்தை உண்டாக்கி வருகின்றது.

இவ்வாறான சுழலில், தற்பொழுது மஞ்சள் கடலின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள போஹாய் விரிகுடாவில் இராணுவ பயிற்சியை நடத்துவதற்கு அந்நாடு தீர்மானித்துள்ளது.

அந்த வகையில், சீனாவின் ஹெபெய் மாகாணம் டாங்ஷான் நகரில் துப்பாக்கிச்சூடு போன்ற நேரடி இராணுவ பயிற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்நிலையில், இந்த பயிற்சியானது இன்றைய தினம் முதல் எதிர் வரும் 14 ஆம் திகதி வரையும் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதனால், பயிற்சி நடைபெறும் பகுதிகளில் கப்பல்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும் கடல்சார் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

Latest Videos