ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும் இடையில் சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பு இன்றைய தினம் முற்பகல் 09 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை இராஜினா செய்தமையை தொடர்ந்து தலைவரின் பங்குபற்றதலின்றி இடம்பெறவுள்ள முதலாவது சந்திப்பு இதுவெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை zoom தொழிநுட்பம் வாயிலாக இணைத்துக் கொள்வதற்கும் சிலர் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தமது கட்சியின் சுயாதீனத்தை பாதுகாத்துக் கொண்டு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக கட்சியின் செயலாளர் சாகரகாரியவசம் குறிப்பிட்டுள்ளார்.