எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலான அமைச்சரவையொன்றை அமைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு சரியான பொருளாதார மற்றும் அரசியல் தீர்வை முன்வைக்கும் எதிர்க்கட்சிகள் இதில் உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய புதிய அமைச்சரவையொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்தை பலப்படுத்தி முன்கொண்டு செல்ல ஆளுந்தரப்பு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பின் போது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது