ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் விமான நிலையத்தில் இருந்து 303 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு மத்திய அமெரிக்க நாடானா நிகாரகுவா நாட்டிற்கு ருமேனியாவின் பிரபலமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் பிரான்ஸ் எல்லைப்பகுதியில் பறந்தபோது விமானத்தில் தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டதால் தரையிறக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.
அனுமதி கிடைத்ததும் கிழக்கு பிரான்ஸில் உள்ள வாட்ரி விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது
அப்போது விமானத்தில் இருந்த சிலர் தாங்கள் மனித கடத்தல் கும்பலால் அவதிக்குள்ளாகியுள்ளோம் என அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கொடுத்ததாக தெரிகிறது.இதனால் பிரான்ஸ் அதிகாரிகள் உடனடியாக விமானத்தை மீண்டும் பறக்க விடாமல் தடுத்தனர்.
அதே நேரத்தில் இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவித்தினர். 303 பேர் ஒரே விமானத்தில் சென்றதால் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
இந்திய தூதரகத்தின் விரிவான விசாரணைக்குப் பின் அவர்கள் மனித கடத்தல் கும்பலால் பாதிக்கப்பட்டவர்களா? என்பது தெரியவரும்.
இவர்கள் அனைவரும் மத்திய அமெரிக்காவுக்கு பயணம் செய்து அதன்பின் சட்டவிரோதமாக அமெரிக்கா அல்லது கனடாவுக்கு செல்ல முயற்சி மேற்கொள்ள நினைத்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
விமான நிலையத்தில் விமான தரையிறங்கியதும் இந்தியர்கள் அனைவரும் இரவு முழுவதும் அங்கேயே தங்கியுள்ள நிலையில் மீண்டும் செல்வதுற்கு அனுமதி கிடைக்காமல் அங்கேயே இருந்து வருகிறார்கள்.
வெளிநாட்டினர் பிரான்ஸ் நாட்டிற்குள் வந்தபிறகு அந்நாட்டின் எல்லை போலீசாரால் நான்கு நாட்களுக்கு அவர்கள் செல்ல வேண்டிய நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள விடாமல் தடுத்து நிறுத்தி வைக்க முடியும்.என தெரிவிக்கபட்டுள்ளது.