Wednesday, June 26, 2024
HomeLatest NewsWorld Newsமரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்ட பெண் 2 மணி நேரத்தில் உயிர் பிழைத்த அதிசயம்…இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய...

மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்ட பெண் 2 மணி நேரத்தில் உயிர் பிழைத்த அதிசயம்…இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வு…

அமெரிக்காவின் பென்னிசில்வேனியா மாகாணத்தில், லேன் கேஸ்டர் கவுண்டி என்ற பகுதி உள்ளது. இங்கு 74 வயதாகும் கான்ஸ்டன்ஸ் கிளான்ஸ் என்ற மூதாட்டி வசித்து வந்தார். இவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து உறவினர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஒரு வார காலமாக மூதாட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் உடல் பாதிப்பு தீவிரமடைந்ததால் அவர் மரணம் அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இறுதி சடங்கு செய்வதற்காக அவரது உடல் வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

இறுதிச் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அதில் பணியாற்றிய ஒருவர் மூதாட்டி கிளான்ஸ் சுவாசிப்பதை பார்த்துள்ளார். இதையடுத்து மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்கு முன்பாக முதாட்டிக்கு முதற்கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட 2 மணி நேரத்திற்கு பின்னர் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதன் பின்னணியில் கிரிமினல் குற்றம் ஏதும் இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உயிரிழந்துவிட்டார் என அறிவிக்கப்பட்ட பின்னர், மருத்துவமனையில் இருந்து அவர் வீட்டிற்கு அனுப்பப்பட்ட 2 மணி நேரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து மருத்துவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிகழ்வு அமெரிக்கா மட்டுமல்லாது இணையத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் தொடர்பான பதிவுக்கு நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர். இன்னும் சில நிமிடங்கள் தாமதித்திருந்தால் பாட்டியை உயிருடன் புதைத்திருப்பார்கள் என்று சிலர் கிண்டலாக கூறியுள்ளனர்.

Recent News