பிரான்ஸ் பிரதமர் இம்மானுவல் மக்ரோன் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க முடியாத சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் இறுதி வாக்கெடுப்புக்கள் கணக்கிடப்பட்ட நிலையில் இறுதி சுற்றில் மக்ரோனின் கட்சியின் வேட்பாளர்கள் தமது ஆசனங்களை கைப்பற்றி மக்ரோனின் வெற்றியை உறுதிப்படுத்தியிருந்தனர்.
ஆனாலும் பிரான்ஸ் பாராளுமன்றில் மக்ரோன் தனது பெரும்பான்மையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
577 மொத்த ஆசனங்களை கொண்ட பிரான்ஸ் பாராளுமன்றில் பெரும்பான்மை பெறவேண்டுமாயின் 289 ஆசனங்களை கைப்பற்ற வேண்டும் என்ற சூழலில் மக்ரோன் தற்போது வரை 210 இருந்து 240 வரையான ஆசனங்களையே கைப்பற்றியிருப்பதாகவும், இந்த வீழ்ச்சி அவரசு ஆட்சியமைப்பிற்கு பெரும்பான்மையை கொடுக்காது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
பிரான்சில் பொருட்களின் வரி அதிகரிப்பு மற்றும் ஓய்வு பெறுபவர்களின் வயது அதிகரிப்பு, அத்துடன் உக்ரைன் ரஷ்யா போர் விவகாரங்கள் என்பன மக்ரோனின் வீழ்ச்சிக்கு பிரதான காரணங்களாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
இதேவேளை இடது சாரி மற்றும் சோசலிச கட்சிகளின் தலைமைவாதியாகிய ஜீன் லூ மெலிக்கன், 149 இருந்து 188 ஆசனங்களை கைப்பற்றி உறுதியான எதிர்கட்சியாக உருவாகியிருக்கின்றமையானது, மக்ரோனுக்கு மேலும் சிக்கலை கொடுக்கும் என கணிக்கப்படுகின்றது.
1988ம் ஆண்டில் இதேபோன்ற பெரும்பான்மையற்று ஆட்சியமைக்கும் நிலை முன்னாள் ஆட்சியாளர் பிரான்ஸ்கொயிஸ்ற்கு ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது