Tuesday, November 19, 2024
HomeLatest Newsமீண்டும் நீண்ட நேர மின்வெட்டு;விசேட அறிவிப்பு வெளியாகியது.

மீண்டும் நீண்ட நேர மின்வெட்டு;விசேட அறிவிப்பு வெளியாகியது.

நாட்டில் கடந்த சில மாதங்களாக நிலவிவரும் பொருளாதார பிரச்சினை மற்றும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் மின்வெட்டும் அமுல் படுத்தப்பட்டு வருகின்றது.

இவ்வாறான நிலையில் தற்போது நாடளாவிய ரீதியில் 3-4 மணித்தியாலங்களே மின்வெட்டு அமுல் படுத்தப்பட்டு வரும் நிலையில் மின்வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட தொழினுட்ப கோளாறு காரணமாக தேசிய மின் கட்டமைப்பு 270 மெகாவோட் மின்சாரத்தை இழந்துள்ளதாகவும் இதனால் எதிர்காலத்தில் மேலும் மின்வெட்டு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பொறியியலாளர் சங்கத் தலைவர் அனில் ரஞ்சித் தெரிவிக்கையில்,

270 மெகாவோட் எண்ணெய் இழப்பை ஈடு கட்டுவது நஷ்டம் என்றும் அந்தத் திறனை நீர் மின்சாரத்தில் இருந்து மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

அதேவேளை மகாவலி அதிகார சபையுடன் கலந்துரையாடப்பட்ட போதும் அவர்கள் அதில் அதிக அக்கறை காட்டவில்லை எனவும் இழந்த இந்தக் கொள்ளளவை சமனலவெவ மற்றும் லக்ஷபான நீர் மின் நிலையத்திலிருந்து மீளப்பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தலைவர் அறிவித்துள்ளார்.

Recent News