Friday, May 3, 2024

மனிதர்கள் பயணிக்கும் முதலாவது மின்சார பறக்கும் தட்டு அறிமுகம்…!

மனிதர்கள் பயணம் செய்யக் கூடிய வகையிலான முதலாவது மின்சார பறக்கும் தட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது சீனாவின் ஷென்செனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மின்சார பறக்கும் தட்டானது டோனட் வடிவில் உருவாக்கப்ட்டுள்ளதுடன் இது நிலத்திலும், நீரிலும் செங்குத்தாக புறப்பட்டு தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில், சுமார் 200 மீட்டர் உயரம் வரை பறக்கக்கூடிய வகையில் இந்த மின்சார பறக்கும் தட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 12 புரொப்பலர் பிளேடுகள் அமைப்புடன் கூடிய இந்த மின்சார பறக்கும் தட்டு 15 நிமிடங்கள் வரை செயற்படும் என கூறப்பட்டுள்ளது.

அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த பறக்கும் தட்டு தற்பொழுது சுற்றுலா மற்றும் விளம்பர நிகழ்ச்சிகளுக்காக பயன்படுகின்றது.

ஆயினும், பயணிகள் பயன்பாட்டுக்கு எப்போது வரும் என்று தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest Videos