குவைட் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அந்த நாட்டு இளவரசா் ஷேக் மேஷல் அல் அகமது அல் ஜாபா் நேற்று (22) அறிவித்தாா்.
நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரம் அளிக்கும் நாட்டின் அரசியல் சாசனத்தை ஆளும் அரசக் குடும்பம் மதித்தாலும்இ நாடாளுமன்றத்தின் மீது பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை கருத்தில் கொண்டு அதனைக் கலைப்பதாக அவா் கூறினாா்.
நாடாளுமன்றத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக குவைத் அமைச்சரவை 2 மாதங்களுக்கு முன்னா் இராஜினாமா செய்தது. அதையடுத்து புதிய அரசை நியமிக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்துக்குள் இருந்தபடி எம்.பி.க்கள் கடந்த வாரம் அமளியில் ஈடுபட்டனா். இது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது என கூறப்படகின்றது.