முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கு அடுத்த தலைமுறையினருடன் தொடர்பில் இருப்பது முக்கியம் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார்.
சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களினால் ஆரம்பிக்கப்பட்ட புதிய கூட்டமைப்பான ‘உத்தர லங்கா சபை’யை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில், ஊடகவியலாளர் ஒருவர், முன்னாள் ஜனாதிபதி மீண்டும் அரசியலுக்கு வர விரும்புகின்றாரா என கேள்வி எழுப்பினார்.
தீவிர அரசியலில் ஈடுபடுவது குறித்து முன்னாள் ஜனாதிபதி எவருக்கும் அறிவிக்கவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மீண்டும் அரசியலுக்கு வருவார் என தாம் நம்பவில்லை எனவும் அனுராத ஜயரத்ன தெரிவித்தார்.
எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ இலங்கையின் மிகவும் அனுபவம் வாய்ந்த ஜனாதிபதிகளில் ஒருவர் என்பதனால் தனது அனுபவங்களை அடுத்த தலைமுறையினருடன் பகிர்ந்து கொள்ள முடியும் என்றும் அனுராத ஜயரத்ன தெரிவித்தார்.