சூடானில் இருக்கும் தனது நாட்டு மக்களை அங்கிருந்து பத்திரமாக வெளியேற்ற ஜப்பான் அரசாங்கம் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த ஒரு வாரங்களாக சூடானின் இராணுவத்திற்கும் துணை இராணுவப் படைகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள போரில் இதுரை ஏறத்தாழ 200 பேர் பலியாகியுள்ளனர்.
குறித்த போரில் வான்வழித் தாக்குதல், பீரங்கித் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூடு போறவற்றால் தலைநகர் கார்ட்டோமும் ஏனைய நகரங்களும் சீர்குலைந்துள்ளன.
தற்பொழுது கிட்டத்தட்ட 60 ஜப்பானியர்கள் சூடானில் இருப்பதுடன், அவர்களில் ஜப்பானிய தூதரக ஊழியர்களும் உள்ளடங்குவதாக ஜப்பானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.