ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி நெப்டியூன் மற்றும் அதன் மென்மையான, தூசி நிறைந்த வளையங்களின் விரிவான படத்தைப் பிடித்து பூமிக்கு அனுப்பியது.
நெப்டியூனின் அழகை மட்டுமல்ல ரகசியங்களையும் ஜேம்ஸ் வெப் தொலைகாட்சி புகைப்படங்களாக பதிவு செய்து அனுப்பி உள்ளது. 2022 செப்டம்பர் 21ம் நாளன்று நாசா வெளியிட்ட இந்த புகைப்படம் வைரலாகிறது. ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் மூலம் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களில், நெப்டியூனின் வளையங்களைக் காட்டுகிறது.
மிகவும் அதிக உயரத்தில் உள்ள மீத்தேன்-பனியைக் காட்டும் கிரகத்தின் தெற்கு அரைக்கோளத்தில் உள்ள பிரகாசமான புள்ளிகளின் வரிசையைக் காட்டும் படம் இது என்பதால் அனைவருக்கும் இது சுவராஸ்யமான புகைப்படங்களாக இருப்பதில் வியப்பில்லை.
முதன் முறைய எடுக்கப்பட்டுள்ள இந்த அரிய புகைப்படமானது, நெப்டியூனின் வளிமண்டலம் தொடர்பான புதிய கோணத்தை காட்டுவதாக ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் அறிவியல் மற்றும் ஆய்வுக்கான மூத்த ஆலோசகர் மார்க் மெக்காக்ரியன் கூறினார்.
ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் அறிவியல் மற்றும் ஆய்வுக்கான மூத்த ஆலோசகர் மார்க் மெக்காக்ரியன், 20 ஆண்டுகளுக்கும் மேலாக வெப் திட்டத்தில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி, ஒளிரும் நெப்டியூன் மற்றும் அதன் நுட்பமான, தூசி நிறைந்த மோதிரங்களின் படத்தை எடுத்துள்ளது என்று நாசா புதன்கிழமை (2022, செப்டம்பர் 21) தெரிவித்துள்ளது. 1989 ஆம் ஆண்டில் நாசாவின் வாயேஜர் 2 மட்டுமே நெப்டியூன் தொடர்பான விண்வெளி ஆய்வுகளை மேற்கொண்டது. அதுதான், சூரியனில் இருந்து வெகு தொலைவில் உள்ள கிரகத்தின் தெளிவான காட்சியாக இருந்தது.
தற்போது, இதுவரை இல்லாத வகையில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் அகச்சிவப்பு இமேஜிங் திறன்கள், நெப்டியூனின் வளிமண்டலம் தொடர்பான புதிய தகவல்களை அறிய உதவுகிறது. ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட முந்தைய படங்களில், நெப்டியூன் அதன் வளிமண்டலத்தில் உள்ள மீத்தேன் காரணமாக ஆழமான நீல நிறத்தில் தோன்றுகிறது.
இருப்பினும், வெப்பின் முதன்மை இமேஜர் NIRCam ஆல் கைப்பற்றப்பட்ட அகச்சிவப்பு அலைநீளங்கள், கிரகத்தை சாம்பல் கலந்த வெண்மையாகக் காட்டுகிறது, பனிக்கட்டி மேகங்கள் மேற்பரப்பில் பரவுகின்றன.