Sunday, November 17, 2024
HomeLatest Newsதமிழ்த் தேசிய அரசியல்வாதிகளை புரட்டி எடுத்த யாழ் மாணவன்!

தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளை புரட்டி எடுத்த யாழ் மாணவன்!

தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குள் பல்வேறு பிரச்சினைகள் நிலவுவதை சுட்டிக்காட்டிய யாழ் இந்துக் கல்லூரி மாணவன் குறிப்பாக வீட்டுக்குள்ளே சொத்துப் பிரச்சினை சைக்கிளிலே மணியை காணவில்லை என தமிழ் தேசிய அரசியல்வாதிகள் தொடர்பில் அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்தார்.

யாழ் இந்துக் கல்லூரி மற்றும் கொழும்பு இந்துக் கல்லூரியின் விவாத அணிகள் மோதும் சொல்லாடல் விவாத அரங்கு-2022 நிகழ்வு நேற்றையதினம் மாலை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இடம்பெற்றபோதே இவ்வாறு தெரிவித்தார்.

‘இன்றைய அரசியற் சூழலில் தமிழ்த்தேசியக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளை ஏற்கத் தயாராக வேண்டும் அல்லது இல்லை’ எனும் தலைப்பில் நடைபெற்ற விவாதத்தில் தொடர்ந்து கருத்து தெரிவித்த யாழ் இந்துக் கல்லூரி மாணவன்,

இன்றைய அமைச்சரவையானது சங்கீதக் கதிரை விளையாட்டுக்கு ஒப்பானதாகும். தினந்தினம் அமைச்சரவை மாறிக் கொண்டிருக்கின்றன. அந்த நிலையில் தமிழ் தேசிய கட்சிகள் அமைச்சரவை பொறுப்பை ஏற்பது எவ்விதத்தில் சரியானது?

அதுமட்டுமன்றி பதவிக்கு வரமுன் உன்னத நாற்காலியாக கருதப்பட்டது. பதவி முடிந்ததன் பின்னர் அது உடைந்த நாற்காலியாக கூறப்படுகிறது. வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இடையில் பதவி விலகவேண்டும் எனும் கடப்பாடு வரும் போது வடக்கு இளைஞர்கள் ஐயா மீண்டும் வரவேண்டும் என்று கூறியபோது உங்களுக்கு தெரியவில்லையா? அந்தக் கதிரைகள் எப்போதும் நிரந்தரமில்லை என்று.

கடந்த ஐந்து வருடம் அந்த பதவிகளில் இருந்து அனுபவித்து விட்டு மக்கள் கேள்வி கேட்கும் போது கூறுகின்றீர்கள் இந்த நாட்காலிக்கு எவ்வித அதிகாரங்களும் இல்லை என்றும் அதிகாரங்கள் அனைத்தும் ஆளுநரிடம் இருக்கின்றது. அதனால் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று.

வல்லை நகரசபை முறைமை தோல்வி திருகோணமலையில் நகரசபையில் உங்களில் இருந்து ஒருவர் வரக்கூடாது என்று பெரும்பாண்மை  ஒருவரை நியமித்தீர்கள். இங்கே மாகாணத்திற்கு வரும் கார்களுக்கே அடிபடும் நீங்கள் அமைச்சரவையில் பதவியேற்று விமானத்திற்கு அடிபடமாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்? 30வருட காலம் நாம் பல சூழ்ச்சிகளால் ஏமாற்றப்பட்டுள்ளோம்.  ஆனால் ஒருதரப்பிலிருந்து ஒருகுரலாக   ஒரு கொள்கைக்காக போராடினோம். ஆனால்  இன்று வெளியிலே மூன்று கோடுகள் போல் காணப்பட்டாலும் உள்ளே முப்பது கோடுகள் காணப்படுகின்றன.

வீட்டுக்குள்ளே சொத்துப் பிரச்சினை சைக்கிளிலிருந்து மணியை காணவில்லை. மணி இருந்தாலாவது அடித்தடித்து முன்னேறியிருக்கலாம்.மீன் சந்தையில் இன்று மீன் செத்து நாறுகின்றது. பார்ப்பதற்கு ஆட்கள் இல்லை. இவ்வாறு இருப்பதற்கு தமிழ்  தேசிய கட்சிகளின் வக்கற்ற நிலை எவ்வாறு அமைச்சரவை பொறுப்பை ஏற்க தயாராக வேண்டும் என்று அல்லது அமைச்சரவை பதவியை ஏற்குமாறு கூறுகின்றீர்கள் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

அதேவேளை பொருளாதார பிரச்சினை என்பது தமிழருக்கு பெரும் பிரச்சினையாக இருக்கப் போவதில்லை 24மணிநேர மின்வெட்டிலும் வாழ்ந்தோம் பஞ்சுக் குப்பி விளக்கில் படித்து பல்கலைக் கழகம் வரை சென்றோம். இன்று எரிபொருள் விலை பெற்றோல் விலை என்று கூறுகின்றீர்கள் ஆனால் நாங்கள் அன்று2000ரூபாவுக்கு பெற்றோல் வாங்கியிருக்கின்றோம். பஞ்சுக் குப்பி விளக்கில் படித்த எங்களால் வெறும் 13 மணித்தியாள மின்வெட்டுக்கு நீங்கள் இவ்வாறு அஞ்சுகிறீர்களே. 24மணித்தியால மின்வெட்டை சந்தித்து வளர்ந்த இனம் நாங்கள்.

எங்களது இலக்கு உரிமை அரசியலே. இவ்வாறு சிறுசிறு பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி எங்களது உயர்ந்த நிலையிலிருந்து எங்களால் இறங்கி வரமுடியாது. எங்களுக்குரிய தீர்வுகள் அமைச்சரவையால் மாத்திரம் தரக்கூடியவை அல்ல எங்களது தீர்வுகளை நான்கு தரப்புகள் மூலம் நான்கு விதமாக அனுகுவதன் மூலம் தீர்க்க முடியும்.

ஒன்று இலங்கை அரசியல் வாதிகள்

இரண்டு பௌத்த மகா சங்கம்

மூன்று கோட்டா கோ கமவில் இருக்கும் முற்போக்கான போராட்ட காரர்கள்

நான்கு பிணைஎடுக்க போராடிக்கொண்டிருக்கும் சர்வதேச சமூகம்.

எனவே சிறுசிறு பிரச்சினைகளுக்கு நாம் கையேந்துமோமாயின் எங்கள் தரத்தில் எங்கள் கௌரவத்தில் இருந்து குறைந்து விடுவோம் எனவும் தெரிவித்தார்.

Recent News