Saturday, January 11, 2025
HomeLatest Newsசஜித் பிரதமரா? அரசியல் வட்டாரத்தில் கசிந்த தகவல்

சஜித் பிரதமரா? அரசியல் வட்டாரத்தில் கசிந்த தகவல்

மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை அரசாங்கத்தை அமைக்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை அமைக்குமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமயத் தலைவர்கள், மல்வத்தை, அஸ்கிரிய பீடாதிபதிகள் உள்ளிட்ட சிவில் அமைப்புகள் இணைந்து நாட்டை மீட்பதற்காக சர்வ கட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு விடுத்த கோரிக்கையை கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், மக்களால் தெரிவு செய்யப்பட்டால் அன்றி, பிரதமர் அல்லது ஜனாதிபதி பதவியை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என சஜித் பிரேமதாச தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recent News