Monday, April 29, 2024
HomeLatest NewsWorld Newsஇஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொள்ளும் எண்ணத்தை ஈரான் கைவிடவேண்டும் - அவுஸ்திரேலியா!

இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொள்ளும் எண்ணத்தை ஈரான் கைவிடவேண்டும் – அவுஸ்திரேலியா!

இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொள்ள வேண்டாம் என ஈரானை உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன அந்த வரிசையில், ரஷ்யா இஸ்ரேல் மற்றும் ஈரானை ஆகிய இரு நாடுகளையும் எச்சரித்து இருந்ததை தொடர்ந்து இஸ்ரேலிற்கு எதிராக பதில் தாக்குதலை மேற்கொள்வதன் மூலம் ஈரான் மத்திய கிழக்கில் மோதல்கள் மேலும் தீவிரமடையும் நிலையை ஏற்படுத்தக்கூடாது என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமூக ஊடக பதிவில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ள அவர் ஈரான் வெளிவிவகார அமைச்சருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.பிராந்தியத்தில் ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதற்கு ஈரான் தனது செல்வாக்கை பயன்படுத்தவேண்டும் பதற்ற நிலையை அதிகரிக்ககூடாது எனவும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். ஈரான் இஸ்ரேலிற்கு எதிராக தாக்குதலை மேற்கொள்ளவுள்ளது என வெளியாகும் அறிகுறிகள் குறித்து அவுஸ்திரேலியா கடும் கரிசணை கொண்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Recent News