இந்தோனேசியாவில் அரசாங்கத்திற்கு எதிராக மேற்கு பப்புவா தேசிய தாராளவாத இராணுவம் என்று கூறப்படுகின்ற கிளர்ச்சியாளர்களின் படை செயற்பட்டு வருகின்றது.
இதனால், அவர்களை அடக்குவதற்கு அரசாங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
நியூசிலாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய இரு அரசாங்கமும் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என தொடர்ந்து குறித்த கிளர்ச்சி படை கோரிக்கை விடுத்து வருகின்றதுடன் கடந்த 2 மாதங்களாக இதுபற்றி எழுதி வந்த கடிதங்களும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
கிளர்ச்சி படைக்கெதிராக நியூசிலாந்து இராணுவம் நடத்திய தாக்குதலில் கிளர்ச்சி படையை சேர்ந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறிருக்கையில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த விமானி பிலிப் மெர்தன்ஸ் என்பவர் கடந்த பெப்ரவரி மாதத்தில் சுசி ஏர் வர்த்தக விமானத்தில் டுகா பகுதியில் அமைந்த பாரோ விமான நிலையத்தில் சென்று இறங்கிய நிலையில் அவரை கிளர்ச்சியாளர்கள் படை பணய கைதியாக பிடித்து சென்றுள்ளனர்.
இதனால் அவரை மீட்கும் பணியில் இந்தோனேசிய இராணுவம் இறங்கியுள்ளதுடன் விமானி பிலிப் அடைத்து வைக்கப்பட்டு வைக்கப்பட்டு இருக்கும் என நம்பப்படும் பகுதியை இராணுவ வீரர்கள் வளைத்து, தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், அவர்களை கிளர்ச்சியாளர்கள் படை துப்பாக்கிகளால் சுட்டு பதில் தாக்குதல் நடத்தியதால் 13 வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன் அவர்களில் வீரர் ஒருவரின் உடலை இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.
ஏனைய 12 வீரர்களின் உடல்களும் கிளர்ச்சியாளர்களிடம் உள்ளதால் அவற்றை மீட்கும் நடவடிக்கையிலும் பொலிஸார் மற்றும் இராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.