ரஷ்யா உக்ரைனின் அணு சக்தி உற்பத்தி நிலையத்தின் மீது மேற்கொண்டு வரும் தொடர் தாக்குதல்களுக்கு இந்தியா தனது கவலையை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளுக்கான இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் “ருச்சிர கம்போஜ்” நேற்றைய தினம் வெளியிட்ட அறிக்கையொன்றில்,”ரஷ்யாவின் மூர்க்கமான செயற்பாடுகள் குறித்து இந்தியா கவலையடைந்து வருகின்றது.
குறிப்பாக உக்ரைனின் “ஜாபோரிஜியா” நகரில் அமைந்துள்ள மிகப் பெரிய அணு சக்தி நிலையத்தை குறிவைத்தது ரஷ்யா தாக்குதல் நடாத்துவது ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும், ரஷ்யா இவ்வாறான தாக்குதல்களை உடன் நிறுத்தி பாதுகாப்பான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என இந்தியா தெரிவித்துள்ளது.
மேலும் அணு சக்தி நிலையம் தற்போதும் செயற்பாட்டு நிலையில் உள்ளது. எனவே அந்த நிலையம் தாக்குதலுக்குட்பட்டு வெடிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் பாரிய ஆபத்துகள் ஏற்படும். இதனால் மோசமான அழிவுகளும் ஏற்படும்.
எனவே ரஷ்யா யோசித்து செயற்படும் என்ற நம்பிக்கை தமக்கிருப்பதாகவும்” ‘ருச்சிர கம்போஜ்’ தெரிவித்துள்ளார்.
ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதலை ஆரம்பித்ததன் பின்னர் முதன் முறையாக இந்தியா ரஷ்யாவின் தாக்குதல்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.