உக்ரைனிலுள்ள நதி ஒன்று திடீரென சிவப்பு நிறத்தில் மாறியுள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
கடந்த வியாழக்கிழமை, மத்திய உக்ரைனிலுள்ள கிரிவி ரிஹ் என்ற நகரின் மீது ரஷ்யப் படைகள் எட்டு ஏவுகணைகளை வீசின.
இந்தத் தாக்குதலில், நகரின் நீரேற்று மையம் ஒன்று சேதமடைந்ததால், இன்ஹுலெட்டுகள் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
உக்ரைனின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான கிரிவி ரிஹ் நகரில் 650,000 பேர் வாழ்ந்துவரும் நிலையில், வெள்ளப்பெருக்கு காரணமாக ஏராளமானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறவேண்டியதாயிற்று.
இதற்கிடையில், நேற்று திடீரென நதி வெள்ளம் சிவப்பு நிறத்தில் மாறியது.
இந்நிலையில் பலரும் அதனால் அதிர்ச்சியடைந்தாலும், உள்ளூர் மக்களோ, நதிக்கரையில் உள்ள சிவப்புக் களிமண், வெள்ளத்தால் அடித்துவரப்படுவதால் தண்ணீர் சிவப்பு நிறமாக மாறியிருக்கலாம் என தெரியவந்துள்ளது.