Sunday, January 19, 2025
HomeLatest Newsஊழல் அமைச்சர்களால் தான் சிக்கலில் சிக்கியுள்ளேன்! – ஜனாதிபதி பரபரப்பு தகவல்

ஊழல் அமைச்சர்களால் தான் சிக்கலில் சிக்கியுள்ளேன்! – ஜனாதிபதி பரபரப்பு தகவல்

ஊழல் அமைச்சர்களினால் தான் சிக்கலில் சிக்கியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நல்ல தொலைநோக்குப் பார்வையும், நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டமும் தமக்கு இருந்த போதிலும் நடைமுறைப்படுத்த முடியாமல் போய்விட்டதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஊழல் நிறைந்த அமைச்சரவை காரணமாக தன்னால் எதனையும் வெற்றிகரமாகச் செய்ய முடியாமல் போனதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மையில் தொழிற்சங்க பிரதிநிதிகள் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recent News