G 7 நாடுகளின் கூட்டத் தொடர் நேற்று ஜேர்மனியில் ஆரம்பமாகிய நிலையில் அதில் உரையாற்றிய ஜேர்மனி அதிபர் ‘ஒலாவ் ஸ்கூல்வ்’, ” ரஷ்யாவின் தாக்குதல்களால் உக்ரைன் சின்னாபின்னமாகிப் போயுள்ளது.
தற்போது தலைநகர் கெய்வில் மக்கள் குடியிருப்புக்கள் மீதும், தாக்குதல் நடாத்தி வருகின்றது.
மக்களை வெளியேற்றுவதில் தொண்டு நிறுவனங்கள் சிரமத்துடன் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம், மற்றும் G 7 நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து உக்ரைனுக்கு தேவையான வழிகளில் உதவிகளை வழங்க முன்வர வேண்டும். ரஷ்ய அதிபர் தொடர்ந்தும் தலையிடியை கொடுத்துக் கொண்டு தான் இருக்கப் போகின்றார். ஆனால் நாம் உதவிகளை வழங்க வேண்டும்”. என தனது ஆரம்ப உரையில் தெரிவித்திருக்கின்றார்.