Monday, November 18, 2024
HomeLatest Newsமீண்டும் அதிகரிக்கும் எரிபொருட்களின் விலைகள்

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருட்களின் விலைகள்

ற்போதுள்ள விலைச்சூத்திரத்தின்படி இன்னும் இரண்டு வாரங்களில் எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் எம்.பி.டி.யு.கே.மாபா பத்திரன தெரிவித்துள்ளார்.

விலைச்சூத்திரத்தின்படி விலைகள் மாதாந்த அடிப்படையில் திருத்தப்பட வேண்டும் என்றாலும், தேவைப்பட்டால் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை விலைகளை திருத்துவதற்கு அமைச்சரவை அதிகாரம் வழங்கியுள்ளது.

கடந்த மே மாதம் 24ம் திகதி முதல் புதிய விலை மாற்றம் அமுலுக்கு வந்தது. அதன்படி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) , பெற்றோல் விலையை 24.3% மற்றும் டீசல் விலையை 38.4% ஆக உயர்த்தியது.

மேலும் அங்கீகரிக்கப்பட்ட விலை சூத்திரத்தின்படி அடுத்த விலை திருத்தம் எதிர்வரும் ஜூன் மாதம் 24 திகதி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், விலைகள் மீளாய்வு செய்யப்பட்டு அதற்கேற்ப விலைகள் திருத்தப்பட வேண்டிய சதவீதமானது தீர்மானிக்கப்படும் .அத்துடன் விலை இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றார்.

Recent News