நேற்றைய தினம் பிலிப்பைன்ஸ் நாட்டின் துணை அதிபராக கடந்த தேர்தலில் தோல்வியடைந்து வெளியேறவிருக்கும் அதிபர் டுடெர்டே வின் முத்த மகள் சாரா பதவியேற்றிருக்கின்றார்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிபர் மற்றும் துணை அதிபர் ஆகியோரை தெரிவு செய்யும் முறை தனித்தனியாக நடைபெறும் வழக்கம் காணப்படுகின்றது.
கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் பெர்டினன்ட் மார்க்கஸ் வெற்றி பெற்ற நிலையில் எதிர்வரும் 30ம் திகதி பிலிப்பைன்ஸ் அதிபராக பதவியேற்க உள்ளார்.
44 வயதுடைய சாரா டுடெர்டே, கடந்த ஒரு வருடமாக நகர மேயராக பதவி வகித்த நிலையில் தற்போது துணை அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் தன்னுடைய பதவியேற்பின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போது, “தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் மூலம் பிளவுபட்டு, பிரிந்து போயிருக்கும் எமது நாட்டை மீண்டும் ஒன்றுபடுத்த நாம் அனைவரும் ஒன்றாக இணைவோம்” என தெரிவித்திருந்தார்.